Wednesday, 2 May 2018

ஆவியின் வரங்கள் & ஆவியின் கனிகள்

BY Repent 5 comments


ஆவியின் வரங்கள் &  ஆவியின் கனிகள்






II
இராஜாக்கள் 2:9
 
அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான்.
இங்கே எலியா செய்த அற்புதங்கள்/அடையாளங்கள் மற்றும் ஆவியானவர் பேசி வழிநடத்துதல் என்னும் விசேஷமான தேவனுடைய சக்தியை "ஆவியின் வரம்" என்று எலிசா குறிப்பிடுகிறான். இங்குதான் முதலாவதாக ஆவியின் வரம் குறித்து சொல்லப்பட்டுள்ளது.

[A] "
ஆவியின் வரங்கள்" என்பதற்கு கிரேக்க மொழியில் χαρσματα (Charismata = giftஎன்று அழைக்கப்படுகின்றது.
1
கொரி 12:4. வரங்களில் வித்தியாசங்கள் உண்டு ஆவியானவர் ஒருவரே.



[B] ஆனால் வரம் என்று வாசிக்கும்போது கிரேக்க மொழியில் δωρε (dōrea =bestowal, bestowment, donation) என்று சொல்லப்படுகின்றது.
(அப் 2:38 38. பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

தமிழில் ஒருமை, பன்மையில் கூறப்பட்டுள்ளது. பவுல் கிரேக்க மொழியில்தான் இந்த நிருபங்களை எழுதினார் என்பதை நினைவில் கொள்ளவும்.

1 கொரி 12ம் அதிகாரத்தில் ஆவியின் வரங்கள் ஒன்பது.

I கொரிந்தியர் 12:8-11 
எப்படியெனில்,
1.
ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும்,
2.
வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,
3.
வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும்,
4.
வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும்,
5.
வேறொருவனுக்கு அற்புதங்களைச்செய்யும் சக்தியும்,
6.
வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும்,
7.
வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும்,
8.
வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப்பேசுதலும்,
9.
வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார்.

I கொரிந்தியர் 14:12 
நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்;

மேலே கூறப்பட்டவை (தேவனுடைய) ஆவியின் வரங்கள் (Charisma)ஆகும்.



"கலா 5:16-22.
பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால்ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறதுஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல. மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
22.
ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை."

22
ல். ஆவியின் கனி என்று சொல்லப்பட்டுள்ளது. இங்கு கனி என்றால் என்ன?

மத்தேயு 7:17 
அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.
யோவான் 15:2 
என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.
மத்தேயு 12:35 
நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.

எனவே கனி என்பது நம்முடைய "சுபாவம் - Character" (குணம்) குறிக்கிறது.
தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் ஆவியின் கனியாகிய அன்பு, ... இச்சையடக்கம் என்ற குணங்களுடன் காணப்பட்டால் நம்மில் அந்த கனிகள் உள்ளன என்று பொருள்படும்.

Sunday, 1 April 2018

பாவம்

BY Repent 1 comment




பாவம் என்றால் என்ன மற்றும் பாவத்தின் வகைகளை 

மத்தேயு 12:31 ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப்பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.

மத்தேயு 12:32 எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.


[Part I]
பாவங்களை இரண்டாகப் பிரிக்கலாம்.

1. Sin of commission - செய்வதால் பாவம். (எண்ணங்களிலோ -thoughts, கிரியைகளிலோ-works )
2. Sin of omission. - செய்யத் தவறியதால் பாவம்.

மனிதன் செய்த முதலாவது பாவம் செய்கையினால் (sin of commission or committed sin) உண்டானது. (புசிக்கவேண்டாம் என்று சொல்லியும் புசித்ததால் வந்த கீழ்ப்படியாமை என்கிற பாவம்) . தீமை செய்யாமல் இருக்கவேண்டும் என அறிந்திருந்தும் தீமை செய்தால் அது அவனுக்கு பாவமாகும். அதே போல் நன்மை செய்ய அறிந்திருந்தும் நன்மை செய்யாமல் போனால் அது அவனுக்கு பாவமாகும்.

கீழே பாவங்களைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளன:
மாற்கு 7:21, 22 பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். புறப்பட்டு வந்து மனுஷனை தீட்டுப்படுத்தும்.

கலாத்தியர் 5:19-21 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.


[Part II]
யோவான் இப்படியாக குறிப்பிடுகிறார்:
1 யோவான் 5:16. மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.

மரணத்துக்கேதுவான பாவம் என்று இங்கே சொல்லப்படுவது இரண்டாம் மரணம் எனப்படும் நமது ஆத்துமாவின் மரணமாகும். அதாவது அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவது ஆகும். முதலாம் மரணம் என்பது நாம் இந்த சரீரத்தை விட்டு கடந்துபோவது ஆகும்.

[மனம்திரும்பி மன்னிப்பு பெறாத] "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று பவுல் சொல்கிறார். தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் வரும் நித்திய ஜீவன். பவுல் மிகவும் வன்மையாக (strong) பாவம் எதுவும் செய்யாமலிருங்கள் என்று சொல்கிறார். யோவானும் பாவம் எதுவும் செய்யாமல் இருங்கள் என்று வன்மையாகவே சொல்லுகிறார். ஆனால் யோவான் சொல்லுவது மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தை சிலர் செய்தால் அதை நாம் பார்த்தால் அல்லது கேள்விப்பட்டால் நாம் அவர்களுக்காக தேவனிடம் வேண்டுதல் செய்யவேண்டும் அப்போது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.

உதாரணத்துக்காக:
- பிதாவே இவர்களை மன்னியும் என்று இயேசு மற்றவர்களுடைய பாவத்துக்காக வேண்டியது.
- யோபு தன் சிநேகிதர்களுக்காக வேண்டியது.
- தேவ ஊழியர்கள் சபையில் ஒருவருடைய தவறுக்காக தேவனிடம் வேண்டுதல் செய்வது.
- பக்கத்து வீட்டுக்காரரிடம் தன் பிள்ளை செய்த தவறுக்கு பெற்றோர் மன்னிப்பு கேட்பது போல்.

ஒரு மனிதன் மனந்திரும்பி அறிக்கை செய்யப்படும் பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும். ஏனெனில் யோவான் "இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்"என்று சொன்னார். பவுல் சொல்லும்போது தேவனைப்பற்றிய அறிவை அறிந்த பின்பு பாவம்செய்தால் அவர்கள் தேவனுடைய குமாரனை சிலுவையில் இரண்டாம் முறையாக அறைவதால் அவர்களுக்கு மன்னிப்பில்லை என்று வன்மையாகக் கூறுகிறார். ஆனால் பேதுரு இயேசுவைப் பின்பற்றிய தேவனுடைய சீடன். அவன் இயேசுவை அறியேன் என்று மறுதலித்தான், சபித்தான். அதன்பின்பு இயேசு சொன்னதை நினைவுகூர்ந்து மனம்கசந்து அழுதான், அவனுக்கு மன்னிப்பு கிடைத்தது. அதன்பின்பு அவன் பெந்தெகொஸ்தே நாளில் பேசியபோது அன்றே மூவாயிரம்பேர் தேவனை ஏற்றுக்கொண்டார்கள். ஒரு போதகர் சொன்னார்: "பெரிய பாவம் (உதாரணத்திற்காக: விபசாரம்) செய்தவர்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் தினமும் மனம்கசந்து துக்கிக்கவேண்டும். இப்படிப்பட்ட பேதுரு, ராகாப், சிம்சோன் என்ற சாக்குபோக்குகளை காட்டி வேண்டுமென்றே பாவம் செய்க்கூடாது. ஏனெனில் அப்படிப்பட்டவர்கள் பாவம் செய்வதற்கு ஒரு சாக்குப்போக்கைத் தேடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தேவனுடைய ஆக்கினைதான் கிடைக்கும்".
மேலும், இயேசு சொன்னார்: "மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக சொல்லப்படும் தூஷணம் இம்மையிலும், மறுமையிலும் மன்னிக்கப்படாது". எனவே பிதா, குமாரன், பரிசுத்த ஆவி எல்லாம் வேறு வேறு அல்ல, ஒன்று தான் என்று சொல்லும் கூட்டத்தாரை பின்பற்றுவது எப்படி சரியாகும்? மரணத்துக்கேதுவான பாவத்தை இங்கே இயேசு குறிப்பிட்டுள்ளார். மற்ற மதத்தினரிலும் அநேகர் பரிசுத்தாவியானவரை தூஷிப்பதால் அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்க முடியாது.

நன்மை செய்ய தகுதியும் பணமும் இருந்தும் நன்மை செய்யாவிட்டால் அது பாவம். இதற்கு "லாசருவும் ஐசுவரியவானும்" பற்றி இயேசு லூக்கா 16ல் சொன்னதை குறிப்பிடலாம் என்பது என்னுடைய சொந்த கருத்து.


பொதுவாக நாம் புரிந்துகொள்ளவேண்டியது என்னவெனில்: மரணத்துக்கேதுவல்லாத பாவம் ஒருவன் செய்தால், மற்றவர்கள் அவனுக்காக தேவனிடத்தில் வேண்டுவதன்மூலம் அவனுக்கு மன்னிக்கப்படும்.

எது மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம் என்று தெள்ளத்தெளிவாக வேதத்தில் சொல்லப்படவில்லை. இருப்பினும் நாம் பழைய ஏற்பாட்டிலிருந்து ஒரு சில சம்பவங்களை யூகித்துச் சொல்லலாம் :
(உபாகமம் என்ற ஆகமத்திலிருந்து)

- நீ பிறனுடைய திராட்சத்தோட்டத்தில் பிரவேசித்தால், உன் ஆசைதீர திராட்சப்பழங்களைத் திருப்தியாகப் புசிக்கலாம்; உன் கூடையிலே ஒன்றும் எடுத்துக்கொண்டு போகக் கூடாது.

- கர்த்தர் மிரியாமுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள். உண்மையான தேவனுடைய ஊழியர்களுக்கு விரோதமாக எழும்பாதீர்கள். மிரியாமுக்காக (யோவான் சொல்லியிருப்பதுபோல்) மோசே தேவனிடம் வேண்டுகிறான், ஆயினும் முற்றிலும் விடுதலை பெற சிலகாலம் ஆயிற்று.

- வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும்.

- நீ உன் திராட்சப்பழங்களை அறுத்தபின்பு, மறுபடியும் அதை அறுக்கத் திரும்பிப்போகவேண்டாம்; அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக.

- எகிப்தியனை அருவருக்காயாக, அவன் தேசத்திலே பரதேசியாயிருந்தாய். (துன்மார்க்கனை அருவருக்காயாக, ஒதுக்கிவிடாயாக.)

....

என்று வேதாகமத்தில் வாசிக்கிறோம்.