Sunday, 20 May 2018

கடைசிக்காலங்களின் அடையாளங்கள்

BY Repent No comments






மத்தேயு 24:5-8 வரையிலான வசனங்கள நமக்கு முக்கியமான சில குறிப்புகளை நாம் கடைசிக்காலங்களை நிதானித்தறியும்படி கொடுக்கின்றன. ‘‘ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு, நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள், கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள், இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டியதே, ஆனாலும், முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்ஜியத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்”. கள்ளக்கிறிஸ்துக்களும், யுத்தங்களும், பஞ்சங்கள், கொள்ளை நோய்கள் மற்றும் இயற்கை சீற்றங்கள் ஆகியவை அதிகரிப்பதே கடைசிக்காலங்களின் அடையாளமாகும். இந்த வேதவாக்கியங்களில், நாம் எச்சரிக்கப்பட்டாலும், நாம் வஞ்சிக்கப்படக்கூடாது, ஏனென்றால் இந்த சம்பவங்களெல்லாம் பிரசவ வலியின் துவக்கம் போலத்தான், முடிவு உடனே வராது.

சில வியாக்கியானம் கொடுப்பவர்கள் ஒவ்வொரு பூமியதிர்சியையும், ஒவ்வொரு அரசியல் மாற்றத்தையும், இஸ்ரேலின் மீதான தாக்குதலையும் கடைசி காலங்கள் வேகமாக வருகின்றது என்பதற்கு உறுதியான அடையாளமாக கருதுகின்றனர். இந்த சம்பவங்களை எல்லாம் கடைசி நாட்கள் வந்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு அடையாளமாக கருதுகின்றனர். இந்த சம்பவங்கள் எல்லாம் கடைசி நாட்கள் வந்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு அடையாளமே தவிர கடைசிகாலங்கள் வந்துவிட்டது என்பதைக் குறிக்கவில்லை. பவுல் அப்போஸ்தலர் கடைசி நாட்களில் கள்ளப்போதனைகள் அபிரிவிதமாக அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளார். ‘‘ஆவியானர் வெளிப்படையாய் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனசாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப் போவார்கள்” (I தீமோத்தேயு 4:1). கடைசிநாட்கள் ‘‘கொடிய காலங்கள்” என்று விளக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் மனுஷனுடைய தீய சுபாவம் அதிகரித்தும், ஜனங்கள் வேண்டுமெனறே ‘சத்தியத்தை எதிர்ப்பார்கள்” (2 திமோத்தேயு 3:1-9, 2தெசலோனிக்கியர் 2:3).

மற்றொரு அடையாளம், யூதருடைய தேவாலயம் மறுபடி எருசலேமில் கட்டப்படும். இஸ்ரேலுக்கு விரோதமாக தாக்குதல்கள் அதிகரிக்கும். ‘ஒரே உலகம்’ என்பதை நோக்கி உலகம் நகரும். கடைசிகாலங்களின் மிக முக்கியமான அடையாளமே இஸ்ரவேல் தேசம்தான். கி.பி.70-திற்குப்பிறகு 1948-இல் தான் இஸ்ரவேல் தேசம் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. தேவன் ஆபிராகாமுக்கு அவனுடைய சந்ததி கானானை சுதந்தரித்து அதை என்றென்றைக்குமான சம்பத்தாக கொள்வார்கள் என்று வாக்குப் பண்ணினார் (ஆதியாகமம் 17:8). எசேக்கியேல் சரீரபிரகாரமாகவும் ஆவிக்குரிய விதத்திலும் இஸ்ரவேல் தேசம் மறுபடி கட்டப்படும் என்று தீர்க்தரிசனம் உரைத்தார். ( எசேக்கியேல் 37). இஸ்ரேல் தன் சொந்த நிலத்தில் தேசமாக இருக்கிறதினால், கடைசிகால தீர்க்கதரிசனத்திலும் ஒரு வெளிச்சமாக உள்ளது. கடைசிக்காலத்தைக் குறித்த படிப்பிலும் மிக முக்கியமான இடத்தை இஸ்ரேல் பிடித்துள்ளது (தானியேல்10:14, வெளிப்படுத்தின் விசேஷம் 11:8).




இந்த அடையாளங்களை மனதில்கொண்டு, நாம் ஞானமாகப் பகுத்தறிந்து கடைசிக்காலங்களை எதிர்ப்பார்க்கலாம். இவற்றில் ஏதோ ஒரு சம்பவத்தை வைத்து சீக்கிரமாக கடைசி காலங்கள் வருகின்றது என்று நாம் புரிந்துக் கொள்ளக்கூடாது. தேவன்நாம் தயாராகும்படி போதுமானத் தகவல்களை நமக்கு அளித்திருக்கிறார், அதற்காகவே நாம் அழைக்கப்பட்டும் இருக்கிறோம்.

0 comments:

Post a Comment