Wednesday, 23 September 2020

irangum Irangum Tamil Keerthanai songs

BY Repent No comments

irangum Irangum Tamil Keerthanai songs


இரங்கும் இரங்கும் கருணைவாரி

இரங்கும் இரங்கும் கருணைவாரி,
ஏசு ராசனே, – பவ – நாசநேசனே!
திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச் சிறுமை பார் ஐயா,
– ஏழை வறுமை தீர், ஐயா – இரங்கும்

அடியேன் பாவக் கடி விஷத்தால்
அயர்ந்து போகிறேன், – மிகப் பயந்து சாகின்றேன் – இரங்கும்

தீமை அன்றி வாய்மை செய்யத் தெரிகிலேன் ஐயா,
– தெரிவைப் புரிகிறேன், ஐயா – இரங்கும்

பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப
 பரிந்து கேள் ஐயா, – தயை – புரிந்து மீள், ஐயா – இரங்கும்

Thursday, 13 June 2019

நம் ஜெபத்திற்கு ஏன் பதில் வருவதில்லை

BY Repent 1 comment

நம் ஜெபத்திற்கு ஏன் பதில் வருவதில்லை 




சங்கீதம் 65:2ல் "ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்". என்பதால் எல்லா ஜெபத்தையும் அவர் கேட்கிறார் (hears). ஒரு விதத்தில் நம்முடைய கர்த்தர் நமது எல்லா ஜெபங்களுக்கும் பதில் அளிக்கிறார். ஒரு சில சமயங்களில் அவர் "ஆம்", "இல்லை" அல்லது "காத்திரு" என்று சொல்கிறார்.

நாம் நம்முடைய பாவங்களை மறைத்து வைத்திருந்தால் அது நம்முடைய ஜெபத்தின் பதிலுக்கு ஒரு தடையாக அமையும். சங்கீதம் 66:18ல் "என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்" என்று வாசிக்கிறோம். இன்னும் சில சமயங்களில் நம்முடைய ஜெபமானது சுயநலமாகவும், தேவனை மகிமைபடுத்தாமல் இருந்தாலும் அப்படியாகும். சில சமயங்களில் தேவன் நம்முடைய வேண்டுதலுக்கு பதில் தந்தால் நாம் மிகவும் துக்கமுடையவர்களாக காணப்படுவோம் என்று அவர் அறிந்திருப்பின் பதில் தராமல் இருப்பார்.
வேதாகமத்தில் ஒன்று தெளிவாகக் காண்கிறோம். தேவன் எப்பொழுதெல்லாம் ஜெபத்திற்கு பதில் கொடுத்தாரோ அப்போதெல்லாம் "சந்தோஷத்தின் நிறைவைக்" காண்கிறோம்.

"கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்" என்று மட்டும் சொல்லாமல் "கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்" என்று தெளிவாக வாசிக்கிறோம். வேதாகமெங்கிலும் தானியேல், தாவீது, பவுல் என்று ஜெபித்தவர்கள் எல்லாரையும் இதற்கு உதாரணமாக வைக்கலாம்.

இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் "எங்களுக்கு புசிக்கும்படி இறைச்சியை தாரும்" என்று மோசேயிடம் 
முறுமுறுப்புடன்மன்னாவை விட்டு இறைச்சியை இச்சித்து கேட்டனர். தேவன் அதற்கு பதில் கொடுத்தாலும் அங்கே ஒரு பெரிய அழிவினை கொண்டுவந்தது.

யோவான் 15:7 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். எனவே நாம் தேவனிலும் அவருடைய சத்தியத்தில் நிலைத்திருக்கிறோமா, அதாவது அவருக்குப் பிரியமாக வாழ்கிறோமா என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

இப்படியாக ஒரு உண்மைச் சம்பவம் உண்டு. ஒரு தந்தைக்கு மூன்று பெண்பிள்ளைகள் இருந்தனர். அவர் தனக்கு ஒரு மகன் வேண்டும் என்று கேட்டார். கர்த்தரோ தெளிவாக அவரிடம், "இல்லை, உனக்கு மகனைக்கொடுப்பது என்னுடைய சித்தமல்ல, உன்னுடைய மகள்களே உனக்கு ஒரு மகனைக் காட்டிலும் பெரிதாக இருப்பார்கள்" என்றார். இருப்பினும் தந்தை ரொம்பவே உபவாசித்து, வருத்தி மிகவும் ஜெபித்து கேட்டார். இறுதியாக தேவன் அவருக்கு ஒரு மகனைக் கொடுத்தார். ஆனால் அந்த மகன் குடிகாரனும் கெட்டகுமாரனுமாக மாறிபோனான். தந்தைக்கோ வயதாகியது, இருதயம் உடைந்து வேதனையுடன் ஏன் தேவனை தொல்லை செய்து ஒரு மகனை கேட்டோம் என்று வருத்தத்துடன் இருந்தார். தன் மகன் நரகத்துக்கு போவான் என்பதை அவரால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. ஆனால் தேவன் சொன்னபடியே அவருடைய வயதான காலத்தில் அவருடைய மகள்கள் அவரை ஒரு மகன் செய்வதைவிட மேலாகவே கவனித்தனர்.


   'உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்' எனவே நீ கலங்காதே என் மகளே, திகையாதே என் மகனே, நான் உங்களை திக்கற்றவர்களாக விடேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 

ஏசாயா 30:18 அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.

புலம்பல் 3:25 தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.


ஏசாயா 49:23 நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை.

நமது ஜெபங்கள் ஒருவேளை நம்முடைய பார்வைக்கு நன்றாக தோன்றலாம், அவைகளுக்கு பதில் இல்லாமல் இருக்கலாம். தேவன் ஒருவேளை உங்களை ஏழையாக வைத்திருக்கலாம் அதேசமயம் தேவபயமின்றி வாழும் ஒருவன் ஐசுவரியவானாக இருக்கலாம். உங்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வுகள் தடைபட்டு, மற்றவர்கள் மேலே செல்வது உங்களுக்கு வருத்தமாக இருக்கலாம். இவைகள் எல்லாவற்றிலும் நாம் தேவனை கேள்வி கேட்பதையும், முறுமுறுப்பதையும் விட்டுவிட்டு, பதில் கிடைக்காத ஜெபங்களுக்காக தேவனுக்கு நன்றியுடன் ஸ்தோத்திரம் செலுத்துவோமாக.

ஏனெனில் இறுதியில் உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கவேண்டும் என்பது தேவனுடைய நோக்கமாயிருக்கிறது.

Sunday, 20 May 2018

கடைசிக்காலங்களின் அடையாளங்கள்

BY Repent No comments






மத்தேயு 24:5-8 வரையிலான வசனங்கள நமக்கு முக்கியமான சில குறிப்புகளை நாம் கடைசிக்காலங்களை நிதானித்தறியும்படி கொடுக்கின்றன. ‘‘ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு, நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள், கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள், இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டியதே, ஆனாலும், முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்ஜியத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்”. கள்ளக்கிறிஸ்துக்களும், யுத்தங்களும், பஞ்சங்கள், கொள்ளை நோய்கள் மற்றும் இயற்கை சீற்றங்கள் ஆகியவை அதிகரிப்பதே கடைசிக்காலங்களின் அடையாளமாகும். இந்த வேதவாக்கியங்களில், நாம் எச்சரிக்கப்பட்டாலும், நாம் வஞ்சிக்கப்படக்கூடாது, ஏனென்றால் இந்த சம்பவங்களெல்லாம் பிரசவ வலியின் துவக்கம் போலத்தான், முடிவு உடனே வராது.

சில வியாக்கியானம் கொடுப்பவர்கள் ஒவ்வொரு பூமியதிர்சியையும், ஒவ்வொரு அரசியல் மாற்றத்தையும், இஸ்ரேலின் மீதான தாக்குதலையும் கடைசி காலங்கள் வேகமாக வருகின்றது என்பதற்கு உறுதியான அடையாளமாக கருதுகின்றனர். இந்த சம்பவங்களை எல்லாம் கடைசி நாட்கள் வந்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு அடையாளமாக கருதுகின்றனர். இந்த சம்பவங்கள் எல்லாம் கடைசி நாட்கள் வந்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு அடையாளமே தவிர கடைசிகாலங்கள் வந்துவிட்டது என்பதைக் குறிக்கவில்லை. பவுல் அப்போஸ்தலர் கடைசி நாட்களில் கள்ளப்போதனைகள் அபிரிவிதமாக அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளார். ‘‘ஆவியானர் வெளிப்படையாய் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனசாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப் போவார்கள்” (I தீமோத்தேயு 4:1). கடைசிநாட்கள் ‘‘கொடிய காலங்கள்” என்று விளக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் மனுஷனுடைய தீய சுபாவம் அதிகரித்தும், ஜனங்கள் வேண்டுமெனறே ‘சத்தியத்தை எதிர்ப்பார்கள்” (2 திமோத்தேயு 3:1-9, 2தெசலோனிக்கியர் 2:3).

மற்றொரு அடையாளம், யூதருடைய தேவாலயம் மறுபடி எருசலேமில் கட்டப்படும். இஸ்ரேலுக்கு விரோதமாக தாக்குதல்கள் அதிகரிக்கும். ‘ஒரே உலகம்’ என்பதை நோக்கி உலகம் நகரும். கடைசிகாலங்களின் மிக முக்கியமான அடையாளமே இஸ்ரவேல் தேசம்தான். கி.பி.70-திற்குப்பிறகு 1948-இல் தான் இஸ்ரவேல் தேசம் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. தேவன் ஆபிராகாமுக்கு அவனுடைய சந்ததி கானானை சுதந்தரித்து அதை என்றென்றைக்குமான சம்பத்தாக கொள்வார்கள் என்று வாக்குப் பண்ணினார் (ஆதியாகமம் 17:8). எசேக்கியேல் சரீரபிரகாரமாகவும் ஆவிக்குரிய விதத்திலும் இஸ்ரவேல் தேசம் மறுபடி கட்டப்படும் என்று தீர்க்தரிசனம் உரைத்தார். ( எசேக்கியேல் 37). இஸ்ரேல் தன் சொந்த நிலத்தில் தேசமாக இருக்கிறதினால், கடைசிகால தீர்க்கதரிசனத்திலும் ஒரு வெளிச்சமாக உள்ளது. கடைசிக்காலத்தைக் குறித்த படிப்பிலும் மிக முக்கியமான இடத்தை இஸ்ரேல் பிடித்துள்ளது (தானியேல்10:14, வெளிப்படுத்தின் விசேஷம் 11:8).




இந்த அடையாளங்களை மனதில்கொண்டு, நாம் ஞானமாகப் பகுத்தறிந்து கடைசிக்காலங்களை எதிர்ப்பார்க்கலாம். இவற்றில் ஏதோ ஒரு சம்பவத்தை வைத்து சீக்கிரமாக கடைசி காலங்கள் வருகின்றது என்று நாம் புரிந்துக் கொள்ளக்கூடாது. தேவன்நாம் தயாராகும்படி போதுமானத் தகவல்களை நமக்கு அளித்திருக்கிறார், அதற்காகவே நாம் அழைக்கப்பட்டும் இருக்கிறோம்.

Wednesday, 2 May 2018

ஆவியின் வரங்கள் & ஆவியின் கனிகள்

BY Repent 5 comments


ஆவியின் வரங்கள் &  ஆவியின் கனிகள்






II
இராஜாக்கள் 2:9
 
அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான்.
இங்கே எலியா செய்த அற்புதங்கள்/அடையாளங்கள் மற்றும் ஆவியானவர் பேசி வழிநடத்துதல் என்னும் விசேஷமான தேவனுடைய சக்தியை "ஆவியின் வரம்" என்று எலிசா குறிப்பிடுகிறான். இங்குதான் முதலாவதாக ஆவியின் வரம் குறித்து சொல்லப்பட்டுள்ளது.

[A] "
ஆவியின் வரங்கள்" என்பதற்கு கிரேக்க மொழியில் χαρσματα (Charismata = giftஎன்று அழைக்கப்படுகின்றது.
1
கொரி 12:4. வரங்களில் வித்தியாசங்கள் உண்டு ஆவியானவர் ஒருவரே.



[B] ஆனால் வரம் என்று வாசிக்கும்போது கிரேக்க மொழியில் δωρε (dōrea =bestowal, bestowment, donation) என்று சொல்லப்படுகின்றது.
(அப் 2:38 38. பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

தமிழில் ஒருமை, பன்மையில் கூறப்பட்டுள்ளது. பவுல் கிரேக்க மொழியில்தான் இந்த நிருபங்களை எழுதினார் என்பதை நினைவில் கொள்ளவும்.

1 கொரி 12ம் அதிகாரத்தில் ஆவியின் வரங்கள் ஒன்பது.

I கொரிந்தியர் 12:8-11 
எப்படியெனில்,
1.
ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும்,
2.
வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,
3.
வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும்,
4.
வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும்,
5.
வேறொருவனுக்கு அற்புதங்களைச்செய்யும் சக்தியும்,
6.
வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும்,
7.
வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும்,
8.
வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப்பேசுதலும்,
9.
வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார்.

I கொரிந்தியர் 14:12 
நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்;

மேலே கூறப்பட்டவை (தேவனுடைய) ஆவியின் வரங்கள் (Charisma)ஆகும்.



"கலா 5:16-22.
பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால்ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறதுஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல. மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
22.
ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை."

22
ல். ஆவியின் கனி என்று சொல்லப்பட்டுள்ளது. இங்கு கனி என்றால் என்ன?

மத்தேயு 7:17 
அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.
யோவான் 15:2 
என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.
மத்தேயு 12:35 
நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.

எனவே கனி என்பது நம்முடைய "சுபாவம் - Character" (குணம்) குறிக்கிறது.
தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் ஆவியின் கனியாகிய அன்பு, ... இச்சையடக்கம் என்ற குணங்களுடன் காணப்பட்டால் நம்மில் அந்த கனிகள் உள்ளன என்று பொருள்படும்.