Friday, 3 February 2017

பைபிள் உண்மையில் தேவனிடத்திலிருந்து வந்த வாசகங்கள்

BY Repent No comments



Bible words came from God



          தேவனைப்பற்றியும் பைபிளைப் பற்றியுமான உங்களது நம்பிக்கையை தற்காப்பது (Apologetic - defending one's faith) என்பது முக்கியமாகும்.
இப்படிப்பட்ட கேள்வி கேட்பவர்களிடம்: "நீங்கள் எப்படி ..? பைபிள் தேவனிடத்திலிருந்து வந்ததென்று நம்புகிறீர்களா? பைபிளை ஒரு தடவையாவது படித்தது உண்டா? மோசேயுடன் தேவன் சீனாய்மலையில் பேசிய வார்த்தைகளைப் படித்துப்பார்த்தீர்களா?தேவனைக்குறித்த உங்களுடைய புரிந்துகொள்ளுதல் என்ன? இயேசுவைபற்றி கொஞ்சம் சொல்லுங்கள்." என்று கேள்வி எழுப்பிப்பாருங்கள். ஏனெனில் பைபிளை திறந்துகூட பார்க்காமல் கேள்விகேட்பவர்களும் உள்ளனர்.

          பைபிள் ஒரு மிகவும் ஆச்சரியமான ஒரு புத்தகமாகும். இதை ஒரு புத்தகம் என்று சொன்னாலும் - உண்மையிலேயே பைபிள் 66 புத்தகங்கள் (ஆகமங்கள்) அடங்கியது ஆகும். - சுமார் 1500 வருடங்களைத்தொடும் காலகட்டத்தில் (span) எழுதப்பட்டது. - இதை வெவ்வேறு கண்டங்களில் ஆடுமேய்ப்பவர், ராஜா, தீர்க்கதரிசிகள், மீன்பிடிப்பவர், வரி வசூலிப்பவர் மற்றும் வைத்தியர் என பல மாறுபட்ட சூழலிருந்த ஏறக்குறைய 40 பேரால் வெவ்வேறு இடங்களிலிருந்து எழுதப்பட்டது. - ஆனால் எல்லாரும் ஒரே கருத்தைச் சொல்கின்றனர்: தேவன் மனிதகுலத்தை மீட்பது பற்றி !! (Redemption of man kind by God) - II பேதுரு 1:20, 21ல் "வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்." என்று தெளிவாக பேதுரு சொல்கிறார்.


     இது வாசிக்கும் சில சந்தேகக்காரர்களுக்கு பயனாக இருக்காமல் போகலாம். ஆனால் தனிப்பட்ட மனிதனாகிய எனக்கு நிச்சயம் உதவி செய்தது என்பதில் ஐயமில்லை. உதாரணமாக தேவன் பாவங்களை மன்னிக்கிறார் என்பதைப் பற்றி சொல்லமுடியும். அதாவது பாவங்களை அறிக்கையிட்டால் நம்மை மன்னிப்பதற்கு அவர் உண்மையும் நீதியுள்ளவருமாயிருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். மேலும் எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயத்தையும் சிந்தையையும் காத்துக்கொள்ளும் என்று சொல்கின்றது. இதை உண்மையிலேயே பெற்றேன். பாவங்களை அறிக்கையிட்டபின் தேவன்கொடுக்கும் சமாதானம் என்பது எத்தனை கோடி செலவழித்தாலும் கிடைக்காது.

   பைபிளும் விஞ்ஞானமும் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது என்று அறிவோம். இருப்பினும், முழுதுமாக அப்படியல்ல. பைபிளை கேலி செய்தவர்களாகிய விஞ்ஞானிகள் தற்போது உண்மைகள் இருப்பதாக நம்புவதால் பைபிளை ஆராய்கின்றனர். பைபிளில் சொல்லப்பட்டவை விஞ்ஞானம் சொல்வதற்கு முன்பே ஆகும்.

-     பைபிளில் நட்சத்திரங்களை எண்ணிமுடியாது என்று சொல்லப்பட்டுள்ளது. (எரே 33:22). நீங்கள் என்னதான் நவீன தொலைநோக்கியை கொண்டுவந்தாலும் அங்கிருக்கும் கணக்கற்ற நட்சத்திரங்களை மனிதனால் எண்ணமுடியாது. ஆரம்பகாலத்தில் இதை கேலிசெய்தவர்கள் இதோ நட்சத்திரங்களின் எண்ணிக்கை இவ்வளவுதான் என்று ஒரு தொகையையும் குறிப்பிட்டனர். பின்பு ஒரு புதிய தொலைநோக்கி வந்தபின்பு அந்த தொகையை கூட்டினர். தற்போது ஹப்புள்(Hubble) போன்ற நவீன தொலைநோக்கிகள் வந்தபின்பு, இல்லை இல்லை கணக்கில் அடங்காத நட்சத்திரங்கள் உள்ளன என்கின்றனர்.



   உலகம் உருண்டை என்று பைபிளில் சொன்னதை ஒருகாலத்தில் கேலிசெய்தனர். விஞ்ஞானம் அதைக் கண்டுபிடித்து உறுதிப்படுத்தியுள்ளது.



-     எபிரெயர் 11:3 ல் "3. விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்."

   "என்ன ஒரு முட்டாள்தனம்? காணப்படுகிறவைகள் கண்களுக்கு காணப்படாதவைகளால் உண்டானதா?" என்று கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் வன்மையான குறைகளைச் சொல்லிவந்தனர்.

     இதோ என் கண் முன்னே இருக்கும் இந்த கணினி, மேஜை, பேனா எல்லாம் எப்படி காணப்படாதவைகளால் உண்டானதென்று சொல்லமுடியும்? நான் இவைகளைக் காண்கின்றேனே, தொடுகின்றேனே! ஆனால் விஞ்ஞானம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சொன்னது என்னவென்றால்: காணும் எல்லாவற்றையுமே கடைசியாக அணுஅளவில் பிரிக்கலாம், அணுவையும் புரோட்டான், எலெக்ட்ரான், நியூட்ரான் என்று பிரிக்கலாம். இவை கண்களுக்குத் தெரியாது.



   ஒருவர் சொன்னார் "பைபிளில் உள்ளவை உண்மை என்று விஞ்ஞானம் நிரூபிப்பதற்கு பதிலாக, விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் உண்மையென்று இப்போது பைபிள் நிரூபிக்கின்றது"

   விஞ்ஞானத்தை நிரூபிப்பது என்பது பைபிளின் நோக்கமல்ல. மனித குலமானது [பாவத்திலிருந்து] மீட்கப்படவேண்டும் என்பதே அதின் முக்கிய அம்சமாகும். பரலோகத்துக்கு எப்படி போவது என்று பைபிள் சொல்கின்றது. எப்படி தேவனை அறிவது என்றும், பாடுகளும் கஷ்டங்களும் நிறைந்த உலகில் எப்படி வாழ்வது என்றும் அதிகாரத்துடன் சொல்கின்றது.



     [c] பைபிளில் சொல்லப்பட்டவைகளை தொல்பொருள் ஆய்வியல் கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்திவிட்டன. இயேசு சிலுவையில் அறையப்படவில்லை, காரணம் அப்படி ஒரு பழக்கமே அக்காலத்தில் இல்லை என்று அநேகர் வாதிட்டனர் (ஆனால் பைபிளில் தெளிவாக இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது) . இந்த சந்தேகக்காரர்களுக்கு 1968ம் வருடம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு மனிதனின் கால் எலும்புகளுடன் சேர்த்து ஒன்பது அங்குல ஆணியுடன் ஒரு மரத்துண்டில் சேர்ந்து இருந்ததை எருசலேமுக்கு வடக்கே எடுத்தது. எனவே பழங்காலத்தில் சிலுவையில் அறையும் பழக்கம் இருந்தது என்பதை உறுதிப்படுத்தியது. [இது இயேசுவின் எலும்புகள் அல்ல, ஏனெனில் அவரை கல்லறையில் வைத்த இடம் வேறு, மேலும் மூன்றாம் நாள் அவர் உயிர்த்தெழுந்து இன்றும் ஜீவிக்கிறார் என்பது நாம் அறிந்த உண்மை. ]



     பொந்தியு பிலாத்து (Pontius Pilate the Governor) என்று ஒரு ஆளுநர் இருக்கவே இல்லை என்று வாதமிட்டனர் பலர். ஆனால் 1961ம் வருடம் செசரீயாவில் ஒரு கல்வெட்டில் ரோமனாகிய பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநர் என்று எழுதியிருந்ததை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்தனர்.

   காய்பா (Caiaphas the high priest) என்று ஒரு பிரதான ஆசாரியன் அப்போது இருக்கவில்லை என்றும் சந்தேகவாதிகள் குறைகூறினர். ஆனால் 1990ல் பிரதான ஆசாரியனாகிய காய்பாவின் கல்லறையானது கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டுபிடித்த யூதர்கள் பைபிளில் கொஞ்சமும் நம்பிக்கையில்லாதவர்கள் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

   மத்திய கிழக்கு நாடுகளில் திருடினால் இன்றும் கட்டைவிரலை வெட்டிவிடும் பழக்கத்தைக் குறித்து இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்து புத்தகங்களில் படிக்கும்போது அநேகர் அதை நம்பாமல் கேலிசெய்யும் ஒரு கூட்டத்தாராக இருப்பார்கள். அப்போதும் இதுபோன்ற அகழ்வாராய்ச்சிகள் உண்மையை நிரூபிக்கும் என்பதில் ஐயமில்லை.



   [d] பைபிள் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை தைரியமாகச் சொன்ன ஒரே புத்தகமாகும். பைபிளில் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் முன்னுரைக்கப்பட்டு அப்படியே நடந்தன. பைபிள் ஒன்றுதான் 100 சதவீதம் தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலை காட்டியுள்ளது. யூதர்கள் உலகின் நான்கு மூலைகளுக்கும் சிதறடிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் எப்படி மீண்டும் ஒன்றாகச் சேருவார்கள் என்றும் சொல்லியிருந்தது. அது அப்படியே நம்முடைய காலத்தில் (May 14, 1948) நிறைவேறியது என்பதை யாரும் மறுக்கமுடியாது (http://en.wikipedia.org/wiki/History_of_Israel). மேலும் அவர்களைச் சுற்றிலும் எதிரிகள் தாக்குவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அது இன்றும் நம் கண்களுக்கு முன் நடைபெறுகின்றது. காசாவிலே நடைபெறும் தாக்குதல்களும், துருக்கி இஸ்ரவேலை தாக்குவதும் மறுக்கமுடியாத இன்றைய செய்திகளாகும். பைபிளானது உலகின் கடைசி யுத்தம் மத்தியகிழக்குப் பகுதியில் இருக்கும் என்றும், குறிப்பாக இஸ்ரவேல் தேசத்தைச் சுற்றிலும் இருக்கும் என்றும் சொல்கின்றது. இயேசு என்பவர் "பெத்லெகேமில் பிறப்பார்" என்று மீகா 5:2ல் வாசிக்கிறோம்.

   பெத்லெகேம் என்பது ஒரு மிகவும் சிறிய ஊர் ஆகும். அங்கே இயேசுவின் காலத்தில் சுமார் 300-1000 பேர் இருந்தார்கள். அப்போது உலகின் ஜனத்தொகையானது சுமார் 20கோடி முதல் 30 கோடியாகும். அதாவது விகிதம் என்பது சுமாராக1:2,00,000 முதல் 1:3,00,000 ஆகும். கி.பி. 2006ம் ஆண்டு பெத்லெகேமின் ஜனத்தொகை 29,930. அப்போது உலகின் ஜனத்தொகை 6,564,356,742 அதாவது 1:219,324 ஒருவராக பிறக்க வாய்ப்புகள். (http://en.wikipedia.com/Bethlehem)



   இயேசுவைக்குறித்த தீர்க்கதரிசனங்களில் வெறும் 8 தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களடங்கிய நிலப்பரப்பில் ஒரு காசை இரண்டு அடி ஆழத்தில் மறைத்துவிட்டு ஒருவனின் கண்களைக் கட்டிவிட்டு ஏதோ ஒரு இடத்தில் விட அவன் ஒரே தடவையில் நடந்து சென்று தோன்றி எடுப்பதற்கான வாய்ப்புகள் என்று சொல்லப்படுகின்றது. இயேசுவோ முந்நூற்றுக்கும் அதிகமான தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றியிருக்கிறார். இப்படியாக இயேசு என்ற ஒருவர் வரலாற்றில் இல்லை என்று நிரூபிக்கப்போன Ph.D. படித்த பல நிபுணர்கள் ஆராய்ச்சிக்குப்பின்பு கிறிஸ்தவர்களாக மாறிவிட்டனர் என்பது உண்மையான செய்தியாகும். நீங்களும் நம்பாவிட்டால் ஒரு நூலகத்திற்கு சென்று இயேசுவைப் பற்றிய புத்தகங்களையும், பைபிளையும் வாசியுங்கள், அலசி ஆராயுங்கள், ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதுங்கள் அதற்குள் நீங்கள் மாறிவிடுவீர்கள் என்று நான் உங்களுக்கு தைரியமாக சொல்கிறேன்.
   பைபிளில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களில் பாதிக்கும் மேல் ஏற்கனவே நிறைவேறிவிட்டன. எஞ்சியிருக்கும் தீர்க்கதரிசனங்களும் தேவன் சொன்னதுபோலவே நிறைவேறும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

0 comments:

Post a Comment