பூமி உருவானது
[1] வெடிச்சிதறலிலிருந்து ஒழுங்குமுறை (order) வருவதில்லை. ஒழுங்கு குறைந்துதான் வரும் (order/discipline decrease). கோள்கள் சூரியனை இன்றும் ஒழுங்குமுறையில் சுற்றிவருதல் என்பது வெடிச்சிதறலை மறுக்க ஒரு எடுத்துக்காட்டாகும்.
[2] சூரியன் நட்சத்திரம் கோள்கள் எல்லாம் ஒரே பொருளிலிருந்து உண்டாகின என்றால் எல்லா கோள்களிலும் அந்த பொருள் காணப்படவேண்டுமல்லவா? ஆனால் ஒவ்வொரு கோள்களும் விசேஷமானவை! சூரியன் என்பது 98% ஹைட்ரஜன்/ஹீலியம் என்றால் புதன், பூமி, செவ்வாய், வெள்ளி ஆகியகோள்களிலும் ஏறக்குறைய அதே விகிதம் இருக்கவேண்டுமல்லவா? ஆனால் இவைகளுக்குள் பொதுவாக 1% குறைவாகவே ஹீலியம் உள்ளது.
[3] சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு பொருள் வெடித்துச்சிதறும்போது அதிலிருந்து வீசப்படும் பகுதிகளும் அதே திசையில் சுற்றவேண்டும்(spin) என்கிற விஞ்ஞானத்தின் அடிப்படையே நாம் வசிக்கும் சூரியகுடும்ப கோள்களில் இல்லை. சூரியனை பூமி, செவ்வாய், வியாழன் என்பவை கடிகாரமுள் சுற்றும் திசையில் சுற்றுகின்றன. ஆனால் புளூட்டோ, வெள்ளி(Venus) ஆகியவை கடிகாரமுள் சுற்றும் திசைக்கு எதிர் திசையில் சுற்றுகின்றன. யுரேனஸ் செங்குத்தாக சக்கரம் சுற்றும் கோணத்தில் சுற்றுகின்றது.
[4] எல்லாக்கோள்களுக்கும்(planets) உள்ள துணைக்கோள்களும்(moons) அந்த கோள்கள் சுற்றும் திசையில் சுற்றவேண்டும். குறைந்தது 6 துணைக்கோள்கள் இதற்கு முரண்படுகின்றன. மேலும் நெப்டியூன், ஜூப்பிட்டர், சனி ஆகிய கோள்களின் துணைக்கோள்கள் இரு திசையிலும் சுற்றும் கோள்களை கொண்டுள்ளன.
[5] நான்கு கோள்களுக்குமட்டும் ஏன் வளையங்கள் என்ற கேள்வியும், வாயுக்கோள்களாகிய ஜூப்பிட்டர், சனிக்கு எப்படி துணைக்கோள்கள் இருக்கமுடியும் என்ற கேள்வியும். சந்திரன் பூமியை வட்ட சுற்றுப்பாதையிலும், பூமி சூரியனை நீள்வட்டப்பாதையிலும் சுற்றுகிறதே போன்ற கேள்வியும் சிந்திக்க வைக்கின்றன.
[6] வேதியியல் பரிணாமமுறையும் (chemical evolution) உயிர் உயிரிலிருந்து வருகிறது என்ற அடிப்படையை நிராகரிக்கமுடியவில்லை. (மில்லரின் ஆய்வுக்கூடசோதனை). புரோட்டீன் (Protein) உண்டாக அமினோ அமிலம் (amino acid) என்பது தானாக முறைப்படி வந்து அதினதின் இடத்தில் உட்கார்ந்தாலே உண்டாகமுடியும். முரணாக அமினோ அமிலங்கள் புரோட்டினிலிருந்து விழத்தான் செய்கின்றன, தானாக வந்து உட்காருவதில்லை. இந்த சமன்பாடில் ஒரு அமினோ அமிலம் சரியான இடத்தில் இல்லையெனில் முழு புரோட்டீனும் வீணாகும். நமது உடலில் இத்தனை புரோட்டீன்கள் காணப்படுவது நிகழ்தகவுக்கு அப்பாற்பட்டது. ஒரு புரோட்டீனில் 100 அமினோ அமிலம் காணப்பட நிகழ்தகவு என்பது 1/ (1065) க்கும் குறைவாகும். இது ஒரு மாநில லாட்டரி சீட்டு ஒன்றை தற்செயலாக தெருவில் கண்டெடுத்து அது முதல் பரிசை தட்டிச்செல்லும் என்பதாக இருக்கவேண்டும், மேலும் அப்படிப்பட்ட லாட்டரி சீட்டை வாரந்தோறும் கண்டெடுக்கவேண்டும். அப்படியாக 1000 வருடங்கள் கண்டெடுக்கவேண்டும். அப்படிப்பட்ட சாத்தியம் தான் 1/(1065) என்பதாகும். அப்படியே புரோட்டீன் அதிசயமாக தற்செயலாக உருவாகினாலும், உயிர்கள் உண்டாக போதுமானதல்ல. ஒரு எளிய "செல்" என்பதற்கே ஆயிரக்கணக்கான புரோட்டீன்கள் தேவைப்படுகின்றது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஃப்ரெட் ஹாய்ல் (Fred Hoyle) என்ற கணித விஞ்ஞானி அதிவேக கம்யூட்டரை தன்னுடைய பட்டதாரிகளுடன் பயன்படுத்தி தற்செயலாக ஒரு உயிர் உண்டாவதற்கான நிகழ்தகவு கண்டறிய முனைந்தார். அவர் கணக்கின்படி: அமீபா என்ற உயிரினத்தின் புரோட்டீன் மாத்திரம் உண்டாவதற்கு 1/(1040000). இது கற்பனைக்கு அப்பாற்பட்டது. இதை விளக்கவேண்டுமென்றால் சூரியகுடும்பத்தையும் தாண்டி அது இருக்கும் அண்டவெளியில் உள்ள ஒரு அணுவை எடுக்க நிகழ்தகவு என்பது 1/(1080) ஆகும் !!!!!! உயிர் தற்செயலாக உண்டாக சாத்தியம் 1/1040000 என்பது மிகவும் கற்னைக்கு அப்பாற்பட்டது என்றார். இதுவே மகாவெடிப்பு கோட்பாட்டையும், டார்விணின் கோட்பாட்டையும் புதைக்க போதுமானது. டார்வின் என்பவரே "Blind watch maker"-ல் ஒரு செல்லில் நியூக்லியஸ் பற்றிய தகவல் மட்டுமே 30 களஞ்சிய புத்தங்களைத் தாண்டும் என்றார். எனவே வெடிச்சிதறலில் இருந்து உயிரினம் உண்டானது என்பதெல்லாம் நகைச்சுவையாக இருக்கின்றது.
[7] தாவரம், மனிதன், விலங்குகள் எல்லாம் "செல்" உடையன. மனித உடலில் மட்டும் "50 million million" (50 trillion) cells, உள்ளன. ஒரு செல் என்பது மட்டும் உயிரோடிருக்க ஒரு சிறு நகரம்(city) செய்யும் வேலைகளைச் செய்கின்றது. செல் மெம்ப்ரேன் என்ற புரோட்டீன்கள் எந்த மூலக்கூறுகள் உள்ளே செல்லவேண்டும், செல்லக்கூடாது என்று முடிவு செய்கின்றன. இவைகள் அழுத்தமானி(pump) போல சத்துப்பொருட்களை இறக்குமதி செய்தும், தேவையற்றதை ஏற்றுமதிசெய்யவும் செய்கின்றன. செல்-க்கு உள்ளே மிகவும் சிக்கலான அமைப்புகள் உள்ளன. Endoplasmic reticulum என்பது ஒரு போக்குவரத்து நிறுவனமாக ribosomes உற்பத்திசெய்யும் பலவிதமான புரோட்டீன்களை கொண்டு செல்கிறது. Golgi body என்பவை புரோட்டீன்களை இந்த மெம்ப்ரேன்களின் வெளிப்பகுதிக்கு கொண்டுசெல்கிறது. இதற்கிடையே lysosome என்பவை இந்த மூலக்கூறுகளை சிறுமூலக்கூறுகளாக உடைக்கும் ஜீரண வேலையை செய்கிறது. Mitochondria என்பவை செல் உட்கொள்ளும் க்ளுகோஸ்-ன் மின்உற்பத்தி நிறுவனம் ஆகும். நியூக்லியஸ் என்பது ஒரு அனைத்து ஆவணங்களின் வங்கிபோல் இது செல் இயங்க உதவுகிறது. இந்த நியூக்லியஸ்க்கு உள்ளே குரோமோசோம்கள் உள்ளன. இவை DNA (DeoxyriboNucleic Acid) நூலகத்தை உள்ளடக்கியுள்ளன. DNA என்பவை உயிர்வாழ பிழை கண்டறிதல், நீக்கம், சரிசெய்தல், தானே மறுபடியும் உருவாக்குதல் போன்ற 1 பில்லியனுக்கும் அதிகமான தகவல் அடங்கியதாகும். இத்தனை உறுப்படிகளும் ஒரே நேரத்தில் உருவாகினால்தான் "செல்" இயங்க முடியும்.
[8] பாக்டீரியாக்கள் என்பவை நகர்ந்து செல்ல அவைகளில் ஒரு மோட்டார் போல் உள்ளன. இவை ஒரு நிமிடத்துக்கு 100,000 சுழற்சிகள் செய்யக்கூடியவையாகும். இந்த பாகங்களில் ஒரு பாகம் செயல் இழப்பின் பாக்டீரியா இறந்துவிடும். நமது தலைமுடியை குறுக்கே வெட்டினால் வரும் குறுக்கு வட்ட அளவு சுமாராக 8 மில்லியன் பாக்டீரியாக்கள் பிடிக்கும். இப்படி பாக்டீரியாக்கள் மிகவும் சிறியதாக இருப்பினும் அவைகளின் அமைப்பு எளிதல்ல.
மகா வெடிப்பிலிருந்து உயிர் வர வாய்ப்பு இல்லை. இவைகளை இப்படி உருவாக்க மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஞானம், அறிவு தேவை. (Intelligence beyond our capacity is involved for this type of design). எனவே சிருஷ்டிப்பைத்தான் இந்த உலகத்தில் காணப்படுபவைகள் நிரூபிக்கின்றன. தானாக உருவாயின என்று ஏற்றுக்கொள்ளவது, ஆழமாக ஆராய்ந்துபார்க்காமல் செய்யும் பிழையாகும்.
0 comments:
Post a Comment