Thursday, 28 December 2017

சேலா, இகாயோன் என்றால் என்ன பொருள்

BY Repent No comments


                       

"சேலா" மற்றும் "இகாயோன்" என்பவை பைபிளில் வரும் பாடல்களில் காணப்படும் குறிப்புகளாகும். இதில் சேலா (Selah) என்பது சங்கீதம் (Psalms) மற்றும் ஆபகூக் (Habakkuk) புத்தகத்திலும், இகாயோன் (Higgaion) என்பது சங்கீதத்திலும் வருகின்றது. ஆனால் இவை வரும் எல்லா இடங்களும் பாடல்களில்தான்; ஆபகூக்கிலும் ஒரு பாட்டில்தான் வருகின்றது. அவைகளின் அர்த்தத்தை அறியும் முன்பு, முன்னோட்டமாக...

உங்களில் இசைக்கருவிகள் வாசிக்கத்தெரிந்தவர்களுக்கு குறிப்பாக பியானோ (Piano, Keyboard) வாசிப்பவர்களுக்கு நான் சொல்வது புரியும். இன்று "Sheet Music" என்ற ஒரு தாளில் பாடல்களின் குறிப்புகள்(Notes) மற்றும் அந்த குறிப்புகள் தாள அளவீடுகளுக்குள் (Measures) வருகின்றன என்றும் காணலாம். உதாரணமாக மிகவும் பிரபலமான அளவீடுகளில் ஒன்று 4/4 . அதாவது ஒரு அளவீட்டுக்குள் 4 காற்-குறியீடுகள் வரும், அல்லது இரண்டு அரை-குறியீடுகள் வரும், அல்லது ஒரு முழுக்குறியீடு வரும். மேலும் இசையின் அளவின் ஏற்றம் இறக்கங்களும் (Dynamics such as: crescendo, decrescendo [p,f, ppp, mp, mf ... etc] ) வருவதைக் காணலாம்.

சங்கீதக்காரனாகிய தாவீது தன் வாழ்வில் பல நேரங்களில் நெருக்கங்கள் பின்னடைவுகள் மற்றும் தோல்விகளையும் சந்திப்பதைப் பார்க்கிறோம். ஆனால் எல்லா நேரங்களிலும் எல்லா சூழ்நிலைகளிலும் அவன் நிதானித்து, தரித்து நின்று, சூழ்நிலையை கவனித்து செயல்படுவதை பார்க்கிறோம். "சேலா' சற்று தரித்திருந்து பின்பு தேவனிடம் சூழ்நிலையை ஒப்புக்கொடுத்து செயல்படுகிறான். அப்பொழுது தேவன் அவனுடைய எல்லா சூழ்நிலைகளிலிருந்தும் அவனை விடுவித்து வெற்றியைத் தருவதைப் பார்க்கிறோம். ஆவிக்குரிய வாழ்விலும் தாவீது தான் பாவத்தில் சிக்கியபோது, தன்னை நிதானித்து கர்த்தரை நோக்கிப் பார்த்து இக்கட்டிலிருந்து விடுதலை பெற்றுக் கொள்கிறான்.... (சேலா.)



எபிரெய மொழியில் சேலா என்பதற்கு ( סלה celah )
- A technical musical term probably showing accentuation, pause, interruption (
இசைக்குறியீட்டின்படி சற்றே நிறுத்தவும்)
- To lift up, exalt ( [
தேவனை] உயர்த்தவும்)
என்று பொருள்படும்.

எனவே இப்பாடலை வாசிக்கும்போது அல்லது அந்த குழுவினர் (Choir) பாடும்போது அங்கே சற்றே நிறுத்தி அடுத்தவரியை படிக்கவேண்டும். சுமார் 3000 வருடங்களுக்கு முன்பே தாவீது இசையில் வல்லவனாகவும் அதை வாசிக்கவும், பாடவும் பெரிய குழுவினரை வைத்திருந்தான் என்றும் அறிவோம். அதில் இப்படி அவன் இசைக்குறியீடுகளைப் பயன்படுத்தியது மிகவும் ஆச்சரியமான விஷயம்!

இகாயோன் என்பதற்கு (הגיון higgayown)
- meditation, musing , resounding music (
தியானிக்கவும், சிந்தனைக்கு, நிரம்பிய இசை)
என்று பொருள்படும்.

சுருக்கமாக சங்கீதம் என்றால் பாடல்; அதை பாட்டாக பாடவேண்டும்; அந்த பாட்டில்:
சேலா என்றால் (இசைக்குறியீட்டின் படி) சற்றே நிறுத்தவும்.
இகாயோன் என்றால் தியானிக்கவும் என்று அர்த்தமாகும்.

சிலர் பழக்கப்பட்டதால், கடகடவென்று வேகமாக சங்கீதத்தை வாசிப்பார்கள். இனிமேல் அந்த இடத்திலாவது ஓடாமல் நிறுத்துங்கள். மீண்டும் அந்த வசனத்தை வாசித்துப்பார்த்து தியானியுங்கள்.

Monday, 20 November 2017

தேவனுடைய சித்தம்..

BY Repent No comments

 தேவனுடைய சித்தத்தை அறிவது எப்படி?


repent kingdom


தேவனுடைய சித்தத்தை அறியமுடிமா? ஆம். அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியர் 1:10ல் தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எனக்கு அறிவித்தார் என்று சொல்கிறார். மேலும் எபிரெயர் 13:21ல் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக என்று எழுதுகின்றார்.

அவருடைய சித்தத்தை அறிவது 
எப்படி?
ரோமர் 12:1, 2 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். (
Do not conform any longer to the pattern of this world, but be transformed by the renewing of your mind. Then you will be able to test and approve what God's will is - his good, pleasing and perfect will.)

[1] இந்த உலகத்திற்கு ஒத்தவேஷம் தரிக்கக்கூடாது. உதாரணமாக விலாங்குமீன் நீரிலுள்ள மீன்களிடம் தன் வாலைக்காட்டி தான் ஒரு மீன் என்றும், பாம்பிடம் தன் தலையைக்காட்டி தான் ஒரு பாம்பு என்றும் சொன்னதாக ஒரு கதை உண்டு. இந்தக் கதை உண்மையோ இல்லையோ, நாம் ஞாயிற்றுக்கிழமையன்று தேவனுடைய பிள்ளைபோலவும், மற்றநாட்களில் உலகமனுஷர்கள் போலவும் வாழக்கூடாது என்பதை இந்தக் கதையின் மூலம் சொல்ல விரும்புகிறேன். அது என்ன உலக வேஷம்? உதாரணமாக நீங்கள் சினிமா பாடல்களில் விருப்பமுள்ளவர்களாயின் அது இந்த உலகத்தின் வேஷம் அல்லது பிசாசின் திசைதிருப்பும் தந்திரங்களில் ஒன்று. எனவேதான் நாம் வேறுபாட்டின் ஜீவியம் (Life of Separation) செய்பவராக காணப்படவேண்டும். ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை; நான் இந்த உலகத்தான் அல்லாதது போல நீங்களும் இந்த உலகத்தாரல்ல என்று இயேசு சொன்னார். எனவே நாம் இந்த உலகத்தில் அன்புகூரக்கூடாது.

தேவனுடைய சித்தம் அறிந்துகொள்ள வேறுபாட்டின் ஜீவியம் அவசியமாகும். தேவன் பழைய ஏற்பாட்டில் விரிகுளம்புள்ளதும் அசைபோடுவதுமாகிய மிருகத்தைப் புசிக்கலாம் என்றார். இங்கே விரிகுளம்புள்ளது என்றால் "வேறுபாட்டின் ஜீவியம்" என்று ஆவிக்குரிய அர்த்தமாகவும், அசைபோடுவது என்றால் "தேவனுடைய வசனத்தை தியானிப்பது" என்று அர்த்தமாகவும் சொல்லலாம். (சங்கீதம் 1:1,2 இரவும் பகலும் அவருடைய வேதத்தின்மேல் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு தன் காலத்தில் தன் கனியைத் தந்து இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்.)

[2] 
Be transformed by the renewing of your mind உங்களுடைய மனதை புதிதாக்கி மறுரூபமாகுங்கள். இங்கே நம்முடைய சுபாவங்கள்/குணங்கள் தேவனுக்கு உகந்தவைகளாக மாற்றப்படவேண்டும்.


[3] நம்முடைய சரீரத்தினை பரிசுத்தமாக பாவத்தினின்று விலக்கி காத்துக்கொள்ளவேண்டும். 
I தெசலோனிக்கேயர் 4:3 நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து என்று வாசிக்கிறோம். சரீரத்தை தேவனுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும்.

[4] ஜெபிக்கவேண்டும். இயேசுவே பிதாவை நோக்கி ஜெபித்தார். நாமும் தினமும் குறைந்தது இரண்டு வேளையாவது ஜெபிக்கவேண்டும். தானியேல் ஒருநாளைக்கு மூன்றுமுறை ஜெபித்தான். ஜெபத்தின்மூலம் தேவனிடத்திலிருந்து பதில்களைப் பெற்றான். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள் என்று வாசிக்கிறோம்.
கொலோசெயர் 4:12 எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான் என்று வாசிக்கிறோம். ஒரு ஏழைவிதவை மற்றும் அநீதியான நியாதிபதி என்னும் உவமையிலிருந்து இயேசு எப்படி சோர்ந்து போகாமல் ஜெபிப்பது என்று கூறுகிறார். இயேசுவும் பிதாவே உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக் கடவது என்று ஜெபிக்கிறார். எனவே ஜெபம் செய்வது மிகவும் அவசியம்.

[5] [முறுமுறுக்காமல்
] எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. (1 தெச 5:18)

[6] I பேதுரு 2:15 நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது. நன்மை செய்யுங்கள், தீமையை நன்மையினாலே வெல்லுங்கள்.

[7] 
பிரசங்கி 12:13ல்
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
ஜெபித்து தேவனிடத்தில் கேட்டால் உங்களைக்குறித்த தம்முடைய சித்தத்தை உங்களுக்கு வசனத்தின்மூலமாகவோ, சொப்பனத்திலோ, தீர்க்கதரிசனத்தின் மூலமாகவோ, வேறு ஏதோ ஒருவரைக்கொண்டு ஆலோசனைக் கொடுத்தோ அல்லது வெறொரு வழியிலோ வெளிப்படுத்துவார். நீங்கள் யாரிடமும் போய் கேட்காமலே இவைகள் உங்களுக்கு நேரிடவேண்டும். ஆனால் அவருடைய சித்தம் நாம் செய்யாமல் நம்முடைய சுய சித்தத்தின்படி செய்யவும் நம்மால் முடியும். தேவன் அதை தடைசெய்வதும் இல்லை. தேவனுடைய சித்தமெல்லாம் வேதவசனத்துடன் ஒத்துப்போகும் என்பதை மறக்கக்கூடாது.

எல்லா காரியத்தையும் ஜெபம்பண்ணி செய்யுங்கள்.
 
- தாவீது தேவனிடத்தில் விசாரிக்கும்போது தேவன் அவனுக்கு ஏபோத்தின் மூலமாக பதில் அளிக்கிறார்.
- சாமுவேலுடன் பேசினார். ஆனால் ஏலி தன்னுடைய பிள்ளைகள்குறித்த காரியத்தில் தேவனுக்கு பிரியமாய் நடக்காமல் போனதால் அவனுடன் பேசவில்லை.
- சவுல் தேவனுக்கு கீழ்ப்படியாமல் போனதால் அவனுடன் பேசவில்லை.
- சிம்சோன் பொருத்தனையை உடைத்தபின்பும் கடைசியாக தேவனிடம் வேண்டி கேட்டதை பெற்றுக்கொள்ளுகிறான்.
- கிதியோன் போருக்கு செல்லும் முன்பு அடையாளம் கேட்டு பெற்றுக்கொள்கிறான்.
- ஏசாயா, எரேமியா, யோனா என்று எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

Monday, 4 September 2017

இயேசுவைப்போல் பிறப்பதற்கு முன்பே பெயர் இடப்பட்டவர்கள்

BY Repent No comments



                              இயேசுவைப்போல் பிறப்பதற்கு முன்பே பெயர் இடப்பட்டவர்கள் 




[1] ஆதியாகமம் 17:19 (ஈசாக்கு)
அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.

[2] ஆதியாகமம் 16:11,12 (இஸ்மவேல்)
பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக. அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்;

[3] I இராஜாக்கள் 13:2 (யோசியா)
அந்த பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி;

[4] I நாளாகமம் 22:9 (சாலொமோன்)
இதோ, உனக்குப் பிறக்கப்போகிற குமாரன் அமைதியுள்ள புருஷனாயிருப்பான்; சுற்றிலுமிருக்கும் அவன் சத்துருக்களையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்; ஆகையால் அவன் பேர் சாலொமோன் என்னப்படும், அவன் நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமரிக்கையையும் அருளுவான்.

[5] லூக்கா 1:13 (யோவான் - ஸ்நானகன்)
தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.

[6] ஏசாயா 44:28. (கோரேஸ்)
கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்.
(குறிப்பு: ஏசாயா-கி.மு. 8ம் நூற்றாண்டு; கோரேஸ்-கி.மு.559~530. சுமார் 200 வருடங்களுக்கு முன்பு)

இயேசுவையும் சேர்த்து மொத்தம் ஏழுபேர்.

[7] மத்தேயு 1:21 (இயேசு)
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
லூக்கா 1:31
இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.




Monday, 14 August 2017

பூமி எப்படி உருவானது

BY Repent No comments



                                                                          பூமி உருவானது 

                         
 

[1] வெடிச்சிதறலிலிருந்து ஒழுங்குமுறை (order) வருவதில்லை. ஒழுங்கு குறைந்துதான் வரும் (order/discipline decrease). கோள்கள் சூரியனை இன்றும் ஒழுங்குமுறையில் சுற்றிவருதல் என்பது வெடிச்சிதறலை மறுக்க ஒரு எடுத்துக்காட்டாகும்.

[2] சூரியன் நட்சத்திரம் கோள்கள் எல்லாம் ஒரே பொருளிலிருந்து உண்டாகின என்றால் எல்லா கோள்களிலும் அந்த பொருள் காணப்படவேண்டுமல்லவா? ஆனால் ஒவ்வொரு கோள்களும் விசேஷமானவை! சூரியன் என்பது 98% ஹைட்ரஜன்/ஹீலியம் என்றால் புதன், பூமி, செவ்வாய், வெள்ளி ஆகியகோள்களிலும் ஏறக்குறைய அதே விகிதம் இருக்கவேண்டுமல்லவா? ஆனால் இவைகளுக்குள் பொதுவாக 1% குறைவாகவே ஹீலியம் உள்ளது.

[3] சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு பொருள் வெடித்துச்சிதறும்போது அதிலிருந்து வீசப்படும் பகுதிகளும் அதே திசையில் சுற்றவேண்டும்(spin) என்கிற விஞ்ஞானத்தின் அடிப்படையே நாம் வசிக்கும் சூரியகுடும்ப கோள்களில் இல்லை. சூரியனை பூமி, செவ்வாய், வியாழன் என்பவை கடிகாரமுள் சுற்றும் திசையில் சுற்றுகின்றன. ஆனால் புளூட்டோ, வெள்ளி(Venus) ஆகியவை கடிகாரமுள் சுற்றும் திசைக்கு எதிர் திசையில் சுற்றுகின்றன. யுரேனஸ் செங்குத்தாக சக்கரம் சுற்றும் கோணத்தில் சுற்றுகின்றது. 


 [4] எல்லாக்கோள்களுக்கும்(planets) உள்ள துணைக்கோள்களும்(moons) அந்த கோள்கள் சுற்றும் திசையில் சுற்றவேண்டும். குறைந்தது 6 துணைக்கோள்கள் இதற்கு முரண்படுகின்றன. மேலும் நெப்டியூன், ஜூப்பிட்டர், சனி ஆகிய கோள்களின் துணைக்கோள்கள் இரு திசையிலும் சுற்றும் கோள்களை கொண்டுள்ளன.

[5] நான்கு கோள்களுக்குமட்டும் ஏன் வளையங்கள் என்ற கேள்வியும், வாயுக்கோள்களாகிய ஜூப்பிட்டர், சனிக்கு எப்படி துணைக்கோள்கள் இருக்கமுடியும் என்ற கேள்வியும். சந்திரன் பூமியை வட்ட சுற்றுப்பாதையிலும், பூமி சூரியனை நீள்வட்டப்பாதையிலும் சுற்றுகிறதே போன்ற கேள்வியும் சிந்திக்க வைக்கின்றன.

[6] வேதியியல் பரிணாமமுறையும் (chemical evolution) உயிர் உயிரிலிருந்து வருகிறது என்ற அடிப்படையை நிராகரிக்கமுடியவில்லை. (மில்லரின் ஆய்வுக்கூடசோதனை). புரோட்டீன் (Protein)  உண்டாக அமினோ அமிலம் (amino acid) என்பது தானாக முறைப்படி வந்து அதினதின் இடத்தில் உட்கார்ந்தாலே உண்டாகமுடியும். முரணாக அமினோ அமிலங்கள் புரோட்டினிலிருந்து விழத்தான் செய்கின்றன, தானாக வந்து உட்காருவதில்லை. இந்த சமன்பாடில் ஒரு அமினோ அமிலம் சரியான இடத்தில் இல்லையெனில் முழு புரோட்டீனும் வீணாகும். நமது உடலில் இத்தனை புரோட்டீன்கள் காணப்படுவது நிகழ்தகவுக்கு அப்பாற்பட்டது. ஒரு புரோட்டீனில் 100 அமினோ அமிலம் காணப்பட நிகழ்தகவு என்பது 1/ (1065) க்கும் குறைவாகும். இது ஒரு மாநில லாட்டரி சீட்டு ஒன்றை தற்செயலாக தெருவில் கண்டெடுத்து அது முதல் பரிசை தட்டிச்செல்லும் என்பதாக இருக்கவேண்டும், மேலும் அப்படிப்பட்ட லாட்டரி சீட்டை வாரந்தோறும் கண்டெடுக்கவேண்டும். அப்படியாக 1000 வருடங்கள் கண்டெடுக்கவேண்டும். அப்படிப்பட்ட சாத்தியம் தான் 1/(1065) என்பதாகும். அப்படியே புரோட்டீன் அதிசயமாக தற்செயலாக உருவாகினாலும், உயிர்கள் உண்டாக போதுமானதல்ல. ஒரு எளிய "செல்" என்பதற்கே ஆயிரக்கணக்கான புரோட்டீன்கள் தேவைப்படுகின்றது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஃப்ரெட் ஹாய்ல் (Fred Hoyle) என்ற கணித விஞ்ஞானி அதிவேக கம்யூட்டரை தன்னுடைய பட்டதாரிகளுடன் பயன்படுத்தி தற்செயலாக ஒரு உயிர் உண்டாவதற்கான நிகழ்தகவு கண்டறிய முனைந்தார். அவர் கணக்கின்படி: அமீபா என்ற உயிரினத்தின் புரோட்டீன் மாத்திரம் உண்டாவதற்கு 1/(1040000). இது கற்பனைக்கு அப்பாற்பட்டது. இதை விளக்கவேண்டுமென்றால் சூரியகுடும்பத்தையும் தாண்டி அது இருக்கும் அண்டவெளியில் உள்ள ஒரு அணுவை எடுக்க நிகழ்தகவு என்பது 1/(1080) ஆகும் !!!!!! உயிர் தற்செயலாக உண்டாக சாத்தியம் 1/1040000 என்பது மிகவும் கற்னைக்கு அப்பாற்பட்டது என்றார். இதுவே மகாவெடிப்பு கோட்பாட்டையும், டார்விணின் கோட்பாட்டையும் புதைக்க போதுமானது. டார்வின் என்பவரே "Blind watch maker"-ல் ஒரு செல்லில் நியூக்லியஸ் பற்றிய தகவல் மட்டுமே 30 களஞ்சிய புத்தங்களைத் தாண்டும் என்றார். எனவே வெடிச்சிதறலில் இருந்து உயிரினம் உண்டானது என்பதெல்லாம் நகைச்சுவையாக இருக்கின்றது.

[7] தாவரம், மனிதன், விலங்குகள் எல்லாம் "செல்" உடையன. மனித உடலில் மட்டும் "50 million million" (50 trillion) cells, உள்ளன. ஒரு செல் என்பது மட்டும் உயிரோடிருக்க ஒரு சிறு நகரம்(city) செய்யும் வேலைகளைச் செய்கின்றது. செல் மெம்ப்ரேன் என்ற புரோட்டீன்கள் எந்த மூலக்கூறுகள் உள்ளே செல்லவேண்டும், செல்லக்கூடாது என்று முடிவு செய்கின்றன. இவைகள் அழுத்தமானி(pump) போல சத்துப்பொருட்களை இறக்குமதி செய்தும், தேவையற்றதை ஏற்றுமதிசெய்யவும் செய்கின்றன. செல்-க்கு உள்ளே மிகவும் சிக்கலான அமைப்புகள் உள்ளன. Endoplasmic reticulum என்பது ஒரு போக்குவரத்து நிறுவனமாக ribosomes உற்பத்திசெய்யும் பலவிதமான புரோட்டீன்களை கொண்டு செல்கிறது. Golgi body என்பவை புரோட்டீன்களை இந்த மெம்ப்ரேன்களின் வெளிப்பகுதிக்கு கொண்டுசெல்கிறது. இதற்கிடையே lysosome என்பவை இந்த மூலக்கூறுகளை சிறுமூலக்கூறுகளாக உடைக்கும் ஜீரண வேலையை செய்கிறது. Mitochondria என்பவை செல் உட்கொள்ளும் க்ளுகோஸ்-ன் மின்உற்பத்தி நிறுவனம் ஆகும். நியூக்லியஸ் என்பது ஒரு அனைத்து ஆவணங்களின் வங்கிபோல் இது செல் இயங்க உதவுகிறது. இந்த நியூக்லியஸ்க்கு உள்ளே குரோமோசோம்கள் உள்ளன. இவை DNA (DeoxyriboNucleic Acid) நூலகத்தை உள்ளடக்கியுள்ளன. DNA என்பவை உயிர்வாழ பிழை கண்டறிதல், நீக்கம், சரிசெய்தல், தானே மறுபடியும் உருவாக்குதல் போன்ற 1 பில்லியனுக்கும் அதிகமான தகவல் அடங்கியதாகும். இத்தனை உறுப்படிகளும் ஒரே நேரத்தில் உருவாகினால்தான் "செல்" இயங்க முடியும்.

[8] பாக்டீரியாக்கள் என்பவை நகர்ந்து செல்ல அவைகளில் ஒரு மோட்டார் போல் உள்ளன. இவை ஒரு நிமிடத்துக்கு 100,000 சுழற்சிகள் செய்யக்கூடியவையாகும். இந்த பாகங்களில் ஒரு பாகம் செயல் இழப்பின் பாக்டீரியா இறந்துவிடும். நமது தலைமுடியை குறுக்கே வெட்டினால் வரும் குறுக்கு வட்ட அளவு சுமாராக 8 மில்லியன் பாக்டீரியாக்கள் பிடிக்கும். இப்படி பாக்டீரியாக்கள் மிகவும் சிறியதாக இருப்பினும் அவைகளின் அமைப்பு எளிதல்ல.

மகா வெடிப்பிலிருந்து உயிர் வர வாய்ப்பு இல்லை. இவைகளை இப்படி உருவாக்க மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஞானம், அறிவு தேவை. (Intelligence beyond our capacity is involved for this type of design). எனவே சிருஷ்டிப்பைத்தான் இந்த உலகத்தில் காணப்படுபவைகள் நிரூபிக்கின்றன. தானாக உருவாயின என்று ஏற்றுக்கொள்ளவது, ஆழமாக ஆராய்ந்துபார்க்காமல் செய்யும் பிழையாகும்.

Friday, 3 February 2017

பைபிள் உண்மையில் தேவனிடத்திலிருந்து வந்த வாசகங்கள்

BY Repent No comments



Bible words came from God



          தேவனைப்பற்றியும் பைபிளைப் பற்றியுமான உங்களது நம்பிக்கையை தற்காப்பது (Apologetic - defending one's faith) என்பது முக்கியமாகும்.
இப்படிப்பட்ட கேள்வி கேட்பவர்களிடம்: "நீங்கள் எப்படி ..? பைபிள் தேவனிடத்திலிருந்து வந்ததென்று நம்புகிறீர்களா? பைபிளை ஒரு தடவையாவது படித்தது உண்டா? மோசேயுடன் தேவன் சீனாய்மலையில் பேசிய வார்த்தைகளைப் படித்துப்பார்த்தீர்களா?தேவனைக்குறித்த உங்களுடைய புரிந்துகொள்ளுதல் என்ன? இயேசுவைபற்றி கொஞ்சம் சொல்லுங்கள்." என்று கேள்வி எழுப்பிப்பாருங்கள். ஏனெனில் பைபிளை திறந்துகூட பார்க்காமல் கேள்விகேட்பவர்களும் உள்ளனர்.

          பைபிள் ஒரு மிகவும் ஆச்சரியமான ஒரு புத்தகமாகும். இதை ஒரு புத்தகம் என்று சொன்னாலும் - உண்மையிலேயே பைபிள் 66 புத்தகங்கள் (ஆகமங்கள்) அடங்கியது ஆகும். - சுமார் 1500 வருடங்களைத்தொடும் காலகட்டத்தில் (span) எழுதப்பட்டது. - இதை வெவ்வேறு கண்டங்களில் ஆடுமேய்ப்பவர், ராஜா, தீர்க்கதரிசிகள், மீன்பிடிப்பவர், வரி வசூலிப்பவர் மற்றும் வைத்தியர் என பல மாறுபட்ட சூழலிருந்த ஏறக்குறைய 40 பேரால் வெவ்வேறு இடங்களிலிருந்து எழுதப்பட்டது. - ஆனால் எல்லாரும் ஒரே கருத்தைச் சொல்கின்றனர்: தேவன் மனிதகுலத்தை மீட்பது பற்றி !! (Redemption of man kind by God) - II பேதுரு 1:20, 21ல் "வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்." என்று தெளிவாக பேதுரு சொல்கிறார்.


     இது வாசிக்கும் சில சந்தேகக்காரர்களுக்கு பயனாக இருக்காமல் போகலாம். ஆனால் தனிப்பட்ட மனிதனாகிய எனக்கு நிச்சயம் உதவி செய்தது என்பதில் ஐயமில்லை. உதாரணமாக தேவன் பாவங்களை மன்னிக்கிறார் என்பதைப் பற்றி சொல்லமுடியும். அதாவது பாவங்களை அறிக்கையிட்டால் நம்மை மன்னிப்பதற்கு அவர் உண்மையும் நீதியுள்ளவருமாயிருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். மேலும் எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயத்தையும் சிந்தையையும் காத்துக்கொள்ளும் என்று சொல்கின்றது. இதை உண்மையிலேயே பெற்றேன். பாவங்களை அறிக்கையிட்டபின் தேவன்கொடுக்கும் சமாதானம் என்பது எத்தனை கோடி செலவழித்தாலும் கிடைக்காது.

   பைபிளும் விஞ்ஞானமும் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது என்று அறிவோம். இருப்பினும், முழுதுமாக அப்படியல்ல. பைபிளை கேலி செய்தவர்களாகிய விஞ்ஞானிகள் தற்போது உண்மைகள் இருப்பதாக நம்புவதால் பைபிளை ஆராய்கின்றனர். பைபிளில் சொல்லப்பட்டவை விஞ்ஞானம் சொல்வதற்கு முன்பே ஆகும்.

-     பைபிளில் நட்சத்திரங்களை எண்ணிமுடியாது என்று சொல்லப்பட்டுள்ளது. (எரே 33:22). நீங்கள் என்னதான் நவீன தொலைநோக்கியை கொண்டுவந்தாலும் அங்கிருக்கும் கணக்கற்ற நட்சத்திரங்களை மனிதனால் எண்ணமுடியாது. ஆரம்பகாலத்தில் இதை கேலிசெய்தவர்கள் இதோ நட்சத்திரங்களின் எண்ணிக்கை இவ்வளவுதான் என்று ஒரு தொகையையும் குறிப்பிட்டனர். பின்பு ஒரு புதிய தொலைநோக்கி வந்தபின்பு அந்த தொகையை கூட்டினர். தற்போது ஹப்புள்(Hubble) போன்ற நவீன தொலைநோக்கிகள் வந்தபின்பு, இல்லை இல்லை கணக்கில் அடங்காத நட்சத்திரங்கள் உள்ளன என்கின்றனர்.



   உலகம் உருண்டை என்று பைபிளில் சொன்னதை ஒருகாலத்தில் கேலிசெய்தனர். விஞ்ஞானம் அதைக் கண்டுபிடித்து உறுதிப்படுத்தியுள்ளது.



-     எபிரெயர் 11:3 ல் "3. விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்."

   "என்ன ஒரு முட்டாள்தனம்? காணப்படுகிறவைகள் கண்களுக்கு காணப்படாதவைகளால் உண்டானதா?" என்று கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் வன்மையான குறைகளைச் சொல்லிவந்தனர்.

     இதோ என் கண் முன்னே இருக்கும் இந்த கணினி, மேஜை, பேனா எல்லாம் எப்படி காணப்படாதவைகளால் உண்டானதென்று சொல்லமுடியும்? நான் இவைகளைக் காண்கின்றேனே, தொடுகின்றேனே! ஆனால் விஞ்ஞானம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சொன்னது என்னவென்றால்: காணும் எல்லாவற்றையுமே கடைசியாக அணுஅளவில் பிரிக்கலாம், அணுவையும் புரோட்டான், எலெக்ட்ரான், நியூட்ரான் என்று பிரிக்கலாம். இவை கண்களுக்குத் தெரியாது.



   ஒருவர் சொன்னார் "பைபிளில் உள்ளவை உண்மை என்று விஞ்ஞானம் நிரூபிப்பதற்கு பதிலாக, விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் உண்மையென்று இப்போது பைபிள் நிரூபிக்கின்றது"

   விஞ்ஞானத்தை நிரூபிப்பது என்பது பைபிளின் நோக்கமல்ல. மனித குலமானது [பாவத்திலிருந்து] மீட்கப்படவேண்டும் என்பதே அதின் முக்கிய அம்சமாகும். பரலோகத்துக்கு எப்படி போவது என்று பைபிள் சொல்கின்றது. எப்படி தேவனை அறிவது என்றும், பாடுகளும் கஷ்டங்களும் நிறைந்த உலகில் எப்படி வாழ்வது என்றும் அதிகாரத்துடன் சொல்கின்றது.



     [c] பைபிளில் சொல்லப்பட்டவைகளை தொல்பொருள் ஆய்வியல் கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்திவிட்டன. இயேசு சிலுவையில் அறையப்படவில்லை, காரணம் அப்படி ஒரு பழக்கமே அக்காலத்தில் இல்லை என்று அநேகர் வாதிட்டனர் (ஆனால் பைபிளில் தெளிவாக இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது) . இந்த சந்தேகக்காரர்களுக்கு 1968ம் வருடம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு மனிதனின் கால் எலும்புகளுடன் சேர்த்து ஒன்பது அங்குல ஆணியுடன் ஒரு மரத்துண்டில் சேர்ந்து இருந்ததை எருசலேமுக்கு வடக்கே எடுத்தது. எனவே பழங்காலத்தில் சிலுவையில் அறையும் பழக்கம் இருந்தது என்பதை உறுதிப்படுத்தியது. [இது இயேசுவின் எலும்புகள் அல்ல, ஏனெனில் அவரை கல்லறையில் வைத்த இடம் வேறு, மேலும் மூன்றாம் நாள் அவர் உயிர்த்தெழுந்து இன்றும் ஜீவிக்கிறார் என்பது நாம் அறிந்த உண்மை. ]



     பொந்தியு பிலாத்து (Pontius Pilate the Governor) என்று ஒரு ஆளுநர் இருக்கவே இல்லை என்று வாதமிட்டனர் பலர். ஆனால் 1961ம் வருடம் செசரீயாவில் ஒரு கல்வெட்டில் ரோமனாகிய பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநர் என்று எழுதியிருந்ததை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்தனர்.

   காய்பா (Caiaphas the high priest) என்று ஒரு பிரதான ஆசாரியன் அப்போது இருக்கவில்லை என்றும் சந்தேகவாதிகள் குறைகூறினர். ஆனால் 1990ல் பிரதான ஆசாரியனாகிய காய்பாவின் கல்லறையானது கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டுபிடித்த யூதர்கள் பைபிளில் கொஞ்சமும் நம்பிக்கையில்லாதவர்கள் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

   மத்திய கிழக்கு நாடுகளில் திருடினால் இன்றும் கட்டைவிரலை வெட்டிவிடும் பழக்கத்தைக் குறித்து இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்து புத்தகங்களில் படிக்கும்போது அநேகர் அதை நம்பாமல் கேலிசெய்யும் ஒரு கூட்டத்தாராக இருப்பார்கள். அப்போதும் இதுபோன்ற அகழ்வாராய்ச்சிகள் உண்மையை நிரூபிக்கும் என்பதில் ஐயமில்லை.



   [d] பைபிள் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை தைரியமாகச் சொன்ன ஒரே புத்தகமாகும். பைபிளில் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் முன்னுரைக்கப்பட்டு அப்படியே நடந்தன. பைபிள் ஒன்றுதான் 100 சதவீதம் தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலை காட்டியுள்ளது. யூதர்கள் உலகின் நான்கு மூலைகளுக்கும் சிதறடிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் எப்படி மீண்டும் ஒன்றாகச் சேருவார்கள் என்றும் சொல்லியிருந்தது. அது அப்படியே நம்முடைய காலத்தில் (May 14, 1948) நிறைவேறியது என்பதை யாரும் மறுக்கமுடியாது (http://en.wikipedia.org/wiki/History_of_Israel). மேலும் அவர்களைச் சுற்றிலும் எதிரிகள் தாக்குவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அது இன்றும் நம் கண்களுக்கு முன் நடைபெறுகின்றது. காசாவிலே நடைபெறும் தாக்குதல்களும், துருக்கி இஸ்ரவேலை தாக்குவதும் மறுக்கமுடியாத இன்றைய செய்திகளாகும். பைபிளானது உலகின் கடைசி யுத்தம் மத்தியகிழக்குப் பகுதியில் இருக்கும் என்றும், குறிப்பாக இஸ்ரவேல் தேசத்தைச் சுற்றிலும் இருக்கும் என்றும் சொல்கின்றது. இயேசு என்பவர் "பெத்லெகேமில் பிறப்பார்" என்று மீகா 5:2ல் வாசிக்கிறோம்.

   பெத்லெகேம் என்பது ஒரு மிகவும் சிறிய ஊர் ஆகும். அங்கே இயேசுவின் காலத்தில் சுமார் 300-1000 பேர் இருந்தார்கள். அப்போது உலகின் ஜனத்தொகையானது சுமார் 20கோடி முதல் 30 கோடியாகும். அதாவது விகிதம் என்பது சுமாராக1:2,00,000 முதல் 1:3,00,000 ஆகும். கி.பி. 2006ம் ஆண்டு பெத்லெகேமின் ஜனத்தொகை 29,930. அப்போது உலகின் ஜனத்தொகை 6,564,356,742 அதாவது 1:219,324 ஒருவராக பிறக்க வாய்ப்புகள். (http://en.wikipedia.com/Bethlehem)



   இயேசுவைக்குறித்த தீர்க்கதரிசனங்களில் வெறும் 8 தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களடங்கிய நிலப்பரப்பில் ஒரு காசை இரண்டு அடி ஆழத்தில் மறைத்துவிட்டு ஒருவனின் கண்களைக் கட்டிவிட்டு ஏதோ ஒரு இடத்தில் விட அவன் ஒரே தடவையில் நடந்து சென்று தோன்றி எடுப்பதற்கான வாய்ப்புகள் என்று சொல்லப்படுகின்றது. இயேசுவோ முந்நூற்றுக்கும் அதிகமான தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றியிருக்கிறார். இப்படியாக இயேசு என்ற ஒருவர் வரலாற்றில் இல்லை என்று நிரூபிக்கப்போன Ph.D. படித்த பல நிபுணர்கள் ஆராய்ச்சிக்குப்பின்பு கிறிஸ்தவர்களாக மாறிவிட்டனர் என்பது உண்மையான செய்தியாகும். நீங்களும் நம்பாவிட்டால் ஒரு நூலகத்திற்கு சென்று இயேசுவைப் பற்றிய புத்தகங்களையும், பைபிளையும் வாசியுங்கள், அலசி ஆராயுங்கள், ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதுங்கள் அதற்குள் நீங்கள் மாறிவிடுவீர்கள் என்று நான் உங்களுக்கு தைரியமாக சொல்கிறேன்.
   பைபிளில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களில் பாதிக்கும் மேல் ஏற்கனவே நிறைவேறிவிட்டன. எஞ்சியிருக்கும் தீர்க்கதரிசனங்களும் தேவன் சொன்னதுபோலவே நிறைவேறும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

Sunday, 1 January 2017

DID U KNOW

BY Repent No comments


DID U KNOW

 
 
 click link view the video
for BIO Chip



Monday, 26 December 2016

Jesus Hitting Door Please Open Your heart

BY Repent No comments

                            Jesus Hitting The Door Please Open Your heart